தஞ்சாவூர் பகுதியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.. தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.