யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை’ - ஹைதராபாத் மருத்துவர் விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்டு!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவர் இறந்த பிறகு அவர்கள் குடும்பத்தினர் கூறும் ஒரே கருத்து, `காவலர்கள் எங்கள் புகாரை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படி ஏற்றிருந்தால் எங்கள் பெண்ணைக் காப்பாற்றியிருக்கலாம்' என்பதுதான்.