தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன். மாஸ் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனிடம் பேசுவது என்பது எப்போதுமே மிகப்பெரிய எனர்ஜி பூஸ்டர். சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த உரையாடலிலிருந்து...
10 வருஷத்துக்கு முன்னாடி அட்லி எடுத்த `முகப்புத்தகம்' குறும்படத்தில் நடிச்சேன். அப்போ `என்னுடைய ஃபிரெண்ட் மித்ரன் ஷார்ட் பிலிம் பண்றார், நடிக்கிறீங்களா?'ன்னு கேட்டார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். இப்படித்தான் எனக்கு இயக்குநர் மித்ரனைத் தெரியும்.
அப்புறம் அவரோடு 'சினம்'னு ஒரு ஷார்ட் பிலிம் பண்ணினேன். மித்ரன் இயக்கம், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கேமரா, அல்போன்ஸ் புத்திரன் எடிட்டிங்னு செம சூப்பர் டீம் அது. 'இரும்புத்திரை' பட ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்தப்போ நானும் அங்கதான் `சீமராஜா' ஷூட்டிங்ல இருந்தேன். அப்ப மித்ரன், ஜார்ஜை மட்டும் தனியா மீட் பண்ணினேன்.
இரும்புத்திரை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. அடுத்த படத்துல நீங்க நடிக்கிறீங்களா?'னு ஜார்ஜ் கேட்டார். தாராளமாப் பண்ணலாம்னு சொன்னேன்.
இதுவரைக்கும் தொடாத ஒரு ஏரியாவுல படம் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆபீஸ் போகும்வரைக்கும் என்னமாதிரியான படம்னு யோசிச்சுட்டிருந்தேன். ஆபீஸ் போனபிறகு, `என்ன மாதிரி படம் ப்ரோ'ன்னு அவர்கிட்ட கேட்டேன்.
உடனே `சட்டத்தைக் கையில் எடுக்குற Vigilante மாதிரி ஒரு படம்'னு சொன்னார். `நீங்க நம்ப மாட்டீங்க, நானும் இதுமாதிரிதான் யோசிச்சிட்டே வந்தேன்'னு சொன்னேன். இன்றைய சூழலுக்கும், என்னோட இமேஜுக்கும் செட் ஆகுற மாதிரி யோசிச்சுப் பண்ணுன படம்தான் `ஹீரோ.' ''