இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு நாடு - ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளைக் கொண்டு எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் மக்கள் தாங்கள் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பைத் தேடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.