முதற்கட்டமாக தெலங்கானா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா - குஜராத் இடையே தொடங்கப்பட்ட இத்திட்டம்

முதற்கட்டமாக தெலங்கானா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா - குஜராத் இடையே தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது 12 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் தற்போது ஒரு நாடு - ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜூன் 1ஆம் தேதியில் நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.